சருமத்தை பாதுகாக்கும் கரும்பு சாறு!

இளம் வயதிலே ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் அனைத்தையும் நீக்கும் விதத்தில் பெரிதும் பயன்படுகிறது கரும்பு சாறு.
கரும்பு சாறுடன், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாற்றினையும் கலந்து பயன்படுத்த கூடுதல் அழகை பெறலாம் மற்றும் தழும்புகள் மறையும், பருக்கள் வராமல் தடுக்கும்.
வெயிலின் தாக்கத்தினால் முகத்தில் உருவாகும் அழுக்குகளை நீக்கவும் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை நீக்கும், முகத்தில் உருவாகும் கருமை நிறத்தை நீக்கி வெண்மை நிறத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.
கரும்பு சாறுடன் கஸ்தூரி மஞ்சள், பன்னீர், ரோஸ் வாட்டர் கலந்து தேய்த்து வர கண்களிற்கு கீழ் வரும் கருவளையம் மறையும் மற்றும் முகத்திற்கு சிவப்பழகை கொடுக்கும்.
சருமத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கி முகத்தை பொலிவு பெற செய்யும், வேப்பிலை சாற்றினையும் கலந்து உபயோகிக்கலாம்.
கரும்பு சாறுடன் மேலும் கடலை மாவு, எலும்பிச்சை போன்றவையும் கலந்து முகத்திற்கு அல்லது கருமை, சுருக்கம் இருக்கும் இடங்களில் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.