இளமையிலே உருவாகும் சுருக்கத்தை போக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள்!

சிலருக்கு இளமை வயதிலே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு தோற்றத்தையே மாற்றுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களால் இளமையிலேயே வயது முதிர்ந்த தோற்றம் அவர்களை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். சுருக்கத்தினால் ஏற்பட்ட தோல்களை நீக்கி புதிய அழகான தோல்களை பெற சில வாரங்கள் எடுக்கும்.
சுருக்கத்தை போக்க வேண்டுமா ?
சருமத்தை பராமரிக்க பயன்படும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் போன்றவை தேனில் அதிகம் இருப்பதால் முகத்திற்கு தினம் பயன்படுத்தி வர சுருக்கங்கள் நாளடைவில் மறையும். இதனுடன் கடலை மாவு மற்றும் எலும்பிச்சை கலந்து பயன்படுத்த விரைவில் நல்ல பலனை காணலாம். எப்படியும் சில வாரங்களில் மாற்றத்தை கண்டு தொடர்ந்து உபயோகப்படுத்த முழு பலனையும் தரும்.
க்ளைகோலிக் அமிலம் :
க்ளைகோலிக் அமிலம் அதிகம் இருக்கும் சர்க்கரையில் பாகு தயாரித்து தினம் சருமத்திற்கு பயன்படுத்த, அமிலங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கவும் மற்றும் சருமத்தை பிரகாசமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
பழங்கள் :
வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலமும் மற்றும் அதன் சதை பற்றை நன்கு மசித்து முகத்தில் தடவி வர சுருக்கங்களை மறைய செய்து அதனால் ஏற்படும் கோடுகளும் மறைந்து மிருதுவான சருமத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
- பப்பாளியில் இருக்கும் வைட்டமின்கள் :
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் ஈ
மேற்கூறியவை அனைத்தும் சரும பராமரிப்புக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்ததாக இருக்கிறது.
எலும்பிச்சை :
ஒரு எலும்பிச்சையை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் சாற்றினை பிழிந்து எடுத்து அதனை அப்படியேயும் பயன்படுத்தலாம் மற்றும் அதனுடன் வேப்பிலை சாறு, தேன், ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்த பருக்கள், எண்ணெய் சருமம், ஏற்படும் காயங்கள், தழும்புகளை நீக்கி முகத்திற்கு சிவப்பழகை தரும் மற்றும் இதனை உதடுகள், கை, கால்களில், கழுத்து பகுதியில் இருக்கும் கருமை நிறத்தை நீக்கி மேனியை பள பளப்பாக்கும்.