பச்சை கற்பூரம் பற்றி தெரியாத சில உண்மைகள்!

பச்சை கற்பூரத்தை வீட்டில் இதர விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதை போலவே நாம் சாப்பிடும் இனிப்பு உணவுகளிலும் சேர்க்கிறார்கள்.
பச்சை கற்பூரத்தை உணவுகளில் எடுத்து கொள்ளும் பழக்கம் மற்ற நாடுகளில் காண படுகிறது. உணவுகளில் நறுமணத்திற்கு பயன்படுவதை போலவே உடல் உபாதைகளை போகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
கற்பூரம் என்றாலே கோவில்களில் மற்றும் கடவுளுக்கு வழிபாடு செய்யவே பயன்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதனை அதிகம் உபயோகித்தால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும்.
நன்மைகள் :
கற்பூரத்தை கொண்டு தயாரிக்க படும் மருந்துகளை கொண்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படும் வயிற்று கோளாறுகளை போக்கும், மூட்டுகளில் ஏற்படும் வலிகளை போக்கவும், நல்ல வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது, அதோடு தசைகளில் ஏற்படும் பிடிப்புகள், மூச்சு பிடிப்புகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்கவும் மற்றும் இதர கோளாறுகளை போக்கும் பின்வருமாறு :
சருமத்தில் ஏற்படும் கோளாறுகள்
சுவாச உறுப்புகளில் ஏற்படும் நச்சுக்கள்
சளி தொல்லை
தொடர் இருமல்
உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை அளிக்கவும் பயன் உள்ளது.
செய்முறை :
பச்சை கற்பூரத்துடன் துளசி, ஏலக்காய் சேர்த்து நீரினை இரவு தூங்கும் பொழுது ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு, காலை எழுந்தவுடன் அதனை அருந்த உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுத்து நம்மை பராமரிக்கும்.
இன்று தயாரிக்க படும் ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், உணவு பொருட்கள், நறுமணத்தை கொடுக்கவும் உதவுகிறது.
இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட, பலகாரத்தில் கற்பூரத்தை சேர்த்து தயாரிக்க நீண்ட நாட்கள் இருக்கும். எவ்வித பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் இருக்காது.