கேரட் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய சில நன்மைகள்!

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய சில நன்மைகள்:-
நமது உடலை எப்போதும் அழகாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க கேரட் மிகவும் உதவுகிறது. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேபோல் சருமத்திற்கும் அழகைத் அழிக்கும் ஆற்றல் கொண்டது.
உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் சாப்பாட்டிற்கு பின்னர் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
கேரட்டில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து பின்னர் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் முகத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால் சருமத்தில் எந்த விதமான நோயும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மேலும் முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம்.