நமது பொருட்களில் சிலவற்றை மற்றவர்களுடன் மாற்றி பயன்படுத்த கூடாது!

நாம் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றை தனது நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதனால் ஏற்படும் நோய் தொற்றுகள் நம் உயிருக்கே ஆபத்தாக அமையும். நாம் பகிரும் பொருட்களின் மூலம் பரவும் நோய் தொற்றுகள் பல வித நோய்களை ஏற்படுத்தும்.
காது தொலைபேசி :
இயர் போன்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதின் மூலம் ஒருவர் காதில் இருக்கும் நுண் கிருமிகள் அந்த இயர் போனை மற்றொருவர் பயன்படுத்தும் பொழுது நுண் கிருமிகள் பரவி நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். இயர் போன்களை வாங்கியுடன் அவசரமாக காதில் வைக்க கூடாது, அதனை ஒரு துணியை கொண்டு சுத்தம் செய்த பின்னரோ அல்லது அதற்கென்று இருக்கும் மருந்து பொருட்களை கொண்டு சுத்தம் செய்த பின் உபயோகிக்க வேண்டும். இதனை வழக்கமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சோப்பு :
விடுதியில் நபர்கள் பகிர்ந்து கொள்ளும் பொருட்களில் ஒன்று தான் சோப்பு. ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றொருவர் பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் சோப்பின் மூலம் பரவி நோய்களை ஏற்படுத்தும். முதலில் அரிப்புகள் மூலமே தெரிந்து கொள்ளலாம், தொடர்ந்து உபயோகிக்க பாக்டீரியாக்கள் அதிக அளவில் பரவி சருமத்திலும் மற்றும் உடல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காலணி உறைகள் :
ஷூ அணிவதற்கு முன் அணியும் ஷாக்ஸ்களை ஒருவர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், ஒருவர் பயன்படுத்தும் பொழுதே காலில் இருந்து வெளிப்படும் அதிகமான வியர்வையால் தொற்றுகள் ஏற்படும். இதனை மற்றொருவரும் பயன்படுத்த அது அதிகமான பாக்டீரியாக்களின் தொற்றுகளினால் பல இன்னல்களை சந்தித்து மருத்துவரிடம் அடிக்கடி செல்லும் நிலையை உருவாக்கும்.
முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம் :
ஒருவர் பயன்படுத்தும் கிரீமை இன்னொருத்தர் பயன்படுத்த கூடாது. ஒருவரின் சருமத்தை போன்றே மற்றொருவரின் சருமம் இருக்காது. ஆகையால் அழகை சேர்க்கும் என்று எண்ணி பயன்படுத்த கூடாது. எதனையும் அதற்கென்று இருக்கும் மருத்துவரின் ஆலோசனையை கேட்டே உபயோகியுங்கள்.
துண்டுகள் :
துண்டுகளை துவைத்து கொடுத்தால் கூட அது சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். தனது சருமத்திற்கு என்று உபயோகிக்கும் துண்டுகளை பயன்படுத்தினால் அதில் இருக்கும் நுண் கிருமிகள் பரவி சருமத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி பருக்கள், புண்கள், ரத்த திட்டுகள், கரும் புள்ளிகள் என்னும் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.