மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற சில எளிய வழிகள்!

மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற சில எளிய வழிகள்!

ஒருவரின் அழகை அதிகரிப்பதே அவருடைய சிரிப்பு தான். மேலும் பேசும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது அவர்களின் மரியாதைக்கே இழுக்காக மாறிவிடும். பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் முறையாக பராமரிக்காமல் இருப்பது மட்டுமே. மேலும் டீ குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவையும் இதற்கு காரணமாகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க உதவும் எளிய முறையை இப்போது பார்க்கலாம்.

மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக மாற்ற சில எளிய வழிகள்:-

  • பேக்கிங் சோடாவை நீரில் சேர்த்து தினமும் மூன்று வேளை வாயை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை முற்றிலுமாக நீங்கும்.
  • எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து பற்களை தேய்த்து பின்னர் குளிர்ந்த நீரினால் வாயை கொப்பளித்தால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை முற்றிலும் மறையும்.
  • தினம் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டால் அதில் உள்ள அசிடிக் தன்மை பற்களில் உள்ள மஞ்சள் கறையை முற்றிலுமாக நீக்கும்.
  • ஆரஞ்சு பழத் தோலை பற்களில் தேய்த்து காலையில் எழுந்ததும் பற்களை கழுவினால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து பற்களின் வலிமையும் அதிகரிக்கும்.

Share this story