Tamil Wealth

வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில எளிய வழிகள்!!

வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில எளிய வழிகள்!!

எவ்வளவு வேலை செய்தாலும் பணத்தை சேமித்து வைக்க முடியவில்லையா?. பணம் கரைந்து கொண்டே போகிறதா? அதை தடுக்க சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில எளிய வழிகள்!!

எல்லோரும் வீட்டில் விளக்கு ஏற்றும் பழக்கம் கொண்டிருப்போம். அந்த சமயத்தில் காமாட்சி விளக்கினுள் டைமண்ட் வடிவ கற்கண்டுகளை போட்டு தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் அதிகமான அளவு வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு நீங்கி பணக் கஷ்டம் குறையும்.

வீட்டில் பலவிதமான் ஊறுகாய் வைத்திருக்கலாம். எடுத்துக் காட்டாக எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய், மிளகாய் இது போன்ற அனைத்தையும் வைக்க வேண்டும். இது நீங்கள் உணவருந்துவதற்கு சொல்லவில்லை குபேரனுக்கு ஊறுகாய் என்றால் அதிக விருப்பம் இதனால் பலவித ஊறுகாய் வைத்திருக்க வீட்டில் குபேரனின் அருள் கிடைக்கும்.

உங்கள் வீட்டிற்கு ஏதாவது சுமங்கலிப் பெண்கள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முதலில் குடிக்க நீர் கொடுக்க வேண்டும். அதற்கு பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். இதனால் உங்களுடைய முன் ஜென்ம தரித்திரம் விலகி பணவரவு அதிகரிக்கும்.

மாதம் ஒரு முறை அமாவாசை வரும் அந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடவோ, தலைக்கு எண்ணெய் தேய்க்கவோ கூடாது. வீட்டில் உள்ள சாமிக்கு பூஜை செய்யக் கூடாது. மாறாக இறந்த முன்னோர்களை மட்டும் தான் வழிபட வேண்டும். அப்படி செய்தால் பணம் ஏதாவது ஒரு வழியில் உங்களை வந்து சேரும்.

மாலை பொழுது ஆகிவிட்டால் பால், தயிர், தண்ணீர், உப்பு, ஊசி மற்றும் நூல் இவற்றை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. அப்படி செய்தால் பணத்தை கொடுப்பதற்கு சமம்.

Share this story