அழகான சருமத்தை பெற சில எளிய வழிகள்!

அழகான சருமத்தை பெற சில எளிய வழிகள்!

பெரும்பாலானோர்கள் தங்களது முகத்தை அழகாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் ஆண்கள் கருப்பாக இருக்க காரணம் அவர்கள் பல இடங்களுக்கு செல்வதால் ஏற்படும் அழுக்குகளே காரணம். அவை சருமத்தில் உள்ள துளைகளில் தங்கிவிடுகிறது. இதனை நம் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிதாக நீக்க சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

அழகான சருமத்தை பெற சில எளிய வழிகள்:-

  • சந்தனப் பவுடருடன் கடலை மாவையும் பாலையும் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகாக மாறும்.
  • ஸ்ட்ராபெர்ரியுடன், தயிர் சேர்த்து முகத்தில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கேஸ்டைல் சோப்பு கலவையை முகத்தில் பூசினால் முகப்பரு மறைந்து சருமம் அழகாக மாறும்.
  • சந்தனத்தை அரைத்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் அழகான சருமத்தை பெற முடியும். சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.
  • வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
  • குளிக்கும் நீரில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து குளித்தால் சரும பிரச்சனைகள் மறைந்து சருமம் புத்துயிர் பெறும்.

Share this story