இளநரை போக்க சில எளிய வழிகள்!

இளநரை போக்க சில எளிய வழிகள்!

இளநரை போக்கும் வழிகள்!

 

இன்றைய இளம் வயதினர் பலருக்கும் நரை முடி பிரச்சனை உள்ளது. இதனை போக்குவதற்கு சில எளிய வழிகள் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இப்போது காண்போம்.

கறிவேப்பிலை, மருதாணி மற்றும் செம்பருத்தி இம்மூன்றையும் சமமான அளவில் எடுத்து நன்கு அரைத்து எடுத்துத் கொண்டு, அதனை தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். பிறகு தலையை நன்றாக அலசி குளித்தால் முடியானது கருமையாக மாறும்.

கரிசிலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை இம்மூன்றையும் கூட இளநரையை போக்கப் பயன்படுத்தலாம். இதில் கீழாநெல்லியும் சேர்த்து பயன்படுத்தலாம்.

பச்சைத் துளசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை சிறிதளவு தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு இளஞ்சூட்டில் இந்த நீரை முடியின் வேர்க்கால் முதல் நுனி வரை தடவி வர இளநரை நீங்கி முடி கருமையாக மாறும்.

முடி பராமரிப்பிற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் நல்ல பயன் தரும். கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காலையில், வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வரலாம்.

கரிசிலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் இளம் வயதில் நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் முடி கருமையாக வளரும்.

இஞ்சியை சீவி தேனுடன் கலந்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.

Share this story