பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Apr 20, 2018, 15:31 IST

பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்:-
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை விரும்பி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. இதுவரை உங்க்ளுக்கு பலாப்பழம் பிடிக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை இதன் பயன்களை அறிந்து இனிமேலாவது அதை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். இதன் பழம் மட்டுமில்லாமல் கொட்டையும் சாப்பிடலாம். சமையலிலும் இதை சில நகரங்களில் பயன்படுத்திகின்றனர். இதை சாப்பிவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
- பலாப்பழமும் அதன் கொட்டைகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் தாக்கத்திலிருந்து குறைப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
- பலாப்பழத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி உள்ளது என்று சொன்னால் பலரும் அதை நம்புவதில்லை. இது அறிவியல் பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பலாவில் அதிகப்படியான இயற்கை பைட்ரோ நியூட்ரியன்கள் உள்ளன. இதற்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய சக்தி உள்ளது.
- இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் இரத்தத்தின் வெப்ப நிலையை சமநிலைப்படுத்தும் மற்றும் இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்.
- இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான நச்சுகளை வெளியேற்றி இரத்தம் மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. இதனால் புற்றுநோய் தாக்கும் அபாயம் மிக மிக குறைவு.
- இதில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.