Tamil Wealth

புன்னகை உங்களுக்கு கொடுக்கும் நன்மை!!

புன்னகை உங்களுக்கு கொடுக்கும் நன்மை!!

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் அனைவருக்கும் தெரிந்தது. சிரிப்பு நமக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும் மற்றும் நம்மை சுறு சுறுப்புடன் இருக்க உதவும்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது போலவே நன்கு வயிறு குலுங்க சிரிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

சிரிப்பு:

ஒரு தோல்வி வந்து விட்டது என்று சோர்ந்து போகாமல் அழுதுகொண்டே இருக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எண்ணி சிரித்து கொண்டே ஆரம்பித்தால் நமக்கு மூளை சிறப்பாக இயங்கும்.

தினம் நாம் சிரிக்கும் சிரிப்பில் இருந்து நமக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கிறது. உடலில் இருக்கும் வலிகள் மறந்து சந்தோஷத்தை கொடுக்கும்.

கவலை என்ற கொடிய நோய் அனைவருக்கும் வர கூடியது அதில் இருந்து மீள வேண்டும் என்றால் சிரியுங்கள். சிரிப்பு மன அழுத்தத்தை மட்டும் போக்கும் விதமாக இல்லாமல் புற்று நோய், முதுகு வலிகள், இதய நோய்கள் என அனைத்தில் இருந்தும் நம்மை காக்கும்.

Share this story