உணவு முறையினைப் பொறுத்தவரையில் நல்ல பழக்கங்கள் எவை?

உணவுப் பழக்கத்தினை சரியாக கடைபிடிக்காவிடில் நம் உடலானது ஆரோக்கியமற்றதாக மாறுவதோடு, பல வகையான நோய்களுக்கும் ஆளாகின்றது. இப்போது நாம் உணவுப் பழக்கத்தினைப் பொறுத்தவரையில் கொண்டிருக்க வேண்டிய சிறந்த உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.
உணவினை மூன்று நேரங்கள் முதல் ஐந்து நேரங்களாக பிரித்து உண்ணலாம், ஆனால் உணவு சுவையினைக் கருத்தி அதிக அளவினை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டிவரும். அடுத்து காலை உணவினை 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்ல பழக்கம்.
அடுத்து மதிய உணவினை மதியம் 1 மணிக்குள்ளும் இரவு உணவினை 9 மணிக்குள்ளும் முடித்திட வேண்டும். மேலும் கொழுப்பு நிறைந்த வறுத்த உணவுகளைத் தவிர்த்து பருப்பு, காய்கறிகள், தானியங்களை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
உணவு சாப்பிடும்போது இடை இடையே நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், நீரினை சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன்போ அல்லது பின்போ குடிப்பதுதான் சிறந்த பழக்கமாகும்.
அசைவ உணவுகள், நொறுக்குத் தீனிகளை குறைத்துக் கொள்ளவும். சாப்பிட்ட பின்னர் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.