வெயில் கருமையினை போக்க எளிய வழிகள்

வெயில் கருமையினை போக்க எளிய வழிகள்

அதிகபடியான வெயில் தாக்கதினால் நமது உடலில் கை, கால், முகத்தில் கருமை உண்டாகிறது. இந்த கருமையை எளிய வழியில் போக்கலாம்

  1. குங்குமப்பூ மற்றும் பால்

வெதுவெதுப்பான பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதோடு மூன்று துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கை, கால், முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

  1. வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி

வெள்ளரிக்காயை எடுத்து அதனை பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும், அதோடு மூன்று துளிகள் தக்காளி சாறு, சிறிது எலுமிச்சை சாறு, தயிர், தேன், மஞ்சள் தூள் கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

  1. தக்காளி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

தயிர் உடன் மூன்று துளிகள் தக்காளி சாறு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

 

Share this story