சருமத்தை அழகாக்கும் பேஸ் பேக் செய்யும் எளிய முறை!

சருமத்தை அழகாக்கும் பேஸ் பேக் செய்யும் எளிய முறை!

எல்லோரும் தங்கள் சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் எளிதான விஷயமாக அமையாது. வயதினால் ஏற்படும் சுருக்கம், ஹார்மேன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பரு போன்றவை சருமத்தின் அழகை கெடுக்கின்றன. அழகான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தை பெறுவதற்கான எளிய வழியை இப்போது பார்க்கலாம்.

சருமத்தை அழகாக்கும் பேஸ் பேக் செய்யும் எளிய முறை:-

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு,தேங்காய் எண்ணெய், தேன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை தனியாக எடுத்து நன்றாக கலக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அதில் தேன், எலுமிச்சை சாறு போன்றவற்றையும் கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையுடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்தால் போதும் பேஸ் மாஸ்க் ரெடி.

முகத்தில் இந்த மாஸ்கை போடுவதற்கு முன்னர் முகத்தை நன்றாக கழுவி, சுத்தமான லேசான துணியால் முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ் மாஸ்கை முகத்தில் தடவி 45 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் மிருதுவாகும், சுருக்கங்கள் மறையும். முகம் அழகாவதை ஒரிரு நாள்களில் உணர முடியும்.

Share this story