உடல் எடையினைக் குறைக்க செய்ய வேண்டிய சிம்பிளான விஷயங்கள்!!

உடல் எடையினைக் குறைக்க பலரும் பலவகையான டிப்ஸ்களைப் பின்பற்றுவார்கள். ஆனால் நான் இன்று மிகவும் சிம்பிளான டிப்ஸ்களைக் கூறப் போகிறேன்.
1. தண்ணீர் அதிகம் குடித்தல்:
அதிக அளவு குடிக்கப்படும் தண்ணீரானது சீரண சக்தியினை மேம்படுத்தும். அதாவது காலையில் எழுந்ததும் 3 டம்ளர் தண்ணீர், மதியம் 3 டம்ளர், இரவு தூங்கப் போகும் முன் 3 டம்ளர், இதைத் தவிர்த்து ஒவ்வொரு மணி நேரம் ஒருமுறை 1 டம்ளர் குடிக்கவும்.
2. சிறிய பயிற்சிகளைச் செய்தல்:
சாப்பிட்ட உடன் தூங்குதல், நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் போன்றவற்றினைத் தவிர்த்து சிறிய அளவிலான நடைப் பயிற்சிகளைச் செய்தல்.
3. உணவுகளில் நெறிமுறை:
அரிசி சாதம், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் போன்றவற்றினையே எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
4. உடற்பயிற்சிகள்:
யோகா, நடைப்பயிற்சி இவற்றில் ஏதாவது ஒன்றினை நாம் குறைந்தது 30 நிமிடங்கள் செய்தல் வேண்டும்.
5. சிறப்பு உணவு வகைகள்:
கிரீன் டீ, எலுமிச்சை டீ, ஆரஞ்சு டீ போன்றவற்றினை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து குடித்தல் வேண்டும்.