எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் சருமத்திற்கேற்ற எளிய பேஸ்பேக்!

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் சருமத்திற்கேற்ற எளிய பேஸ்பேக்!

ஒரு சிலரின் முகத்தில் எப்போதும் எண்ணெயாகவே இருக்கும். இதனால் அவர்களின் முகத்தில் முகப்பரு மற்றும் இதர சில பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு. எண்ணெய் பசை அவர்களின் அழகை கெடுக்கும் விதமாக அமைகிறது. சரும எண்ணெய் பசையாக இருப்பதற்கு நமது உணவு பழக்கங்கள் கூட காரணமாகிறது. எண்ணெய் பசை சருமத்தை மறைக்க உதவும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் சருமத்திற்கேற்ற எளிய பேஸ்பேக்:-

  • உங்கள் சருமம் எண்ணெய் பசையுடன் இருந்தால் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து உபயோகித்தால் முகம் பொலிவடையும். சமையல் சோடவுடன் தேன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • ஆப்பிளை அரைத்து அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகப்பருக்களை உண்டாக்கும்.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் ஒன்றாக கலந்து பசையாக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • சந்தன பவுடர், ரோஸ் வாட்டர், மஞ்சள் மூன்றையும் சேர்த்து கலக்கி முகத்தில் தேய்த்து 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

Share this story