பாதத்தில் ஏற்படும் பாதிப்புகள் குண படுத்த வேண்டுமா?

சிலருக்கு பாதத்தில் ஏற்படும் பாதிப்புகளால் அவர்களின் அழகு பாதிப்புக்கு உள்ளாகும். கால்களை அழகு படுத்த வேண்டும் என்று அணியும் காலணிகள், கொலுசுகள், நக பூச்சு போன்றவை பயன்படுத்தினாலும் பாதத்தில் இருக்கும் அழகை பொறுத்ததே. பாதத்தில் இருக்கும் தொற்றுக்களை போக்க சில டிப்ஸ் பார்க்கலாம்.
பழ வகைகளையும் பயன்படுத்தலாம் :
பப்பாளி பழத்தின் சதை பற்றினை எடுத்து அதனுடன் எலும்பிச்சை பழத்தின் சாற்றினையும் கலந்து கொள்ளுங்கள். அந்த பேஸ்டினை பாதத்தில் தினம் பயன்படுத்த பாதங்களில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளும் தடுக்க படும்.
எலும்பிச்சையை பயன்டுத்தலாம் :
பாதத்தில் ஏற்படும் வெடிப்புகள், தழும்புகள், கோடுகளை நீக்க உங்கள் கால்களை முதலில் நீரினால் நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள், பின் எலும்பிச்சை பழத்தை எடுத்து கொண்டு அதனை நறுக்கி சாற்றினை பிழிந்து எடுத்து கொண்டு பாதத்தில் பாதிப்பு இருக்கும் இடத்தில் கையினால் அல்லது மிருதுவான துணியை கொண்டு ஒத்தடம் கொடுங்கள். சாறு உறிஞ்சப்படும், உறிஞ்சிய பின்னரும் சாறினை பயன்படுத்துங்கள் இதனை தினம் பாதிப்புக்கு உள்ள இடத்தில் பயன்டுத்தி வர ஒரு வாரத்திற்குள் நல்ல பலனை காணலாம். பாதத்திற்கு பயன்படுத்திய பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
வறண்ட சருமத்தை போக்க வேண்டுமா?
நீர் சத்துக்களின் குறைபாடுகளால் ஏற்படும் வறட்சி, ஏற்பட்டு கால்களில் வெடிப்புகள், பிளவுகள் உருவாகும். பழங்களில் வாழை பழத்தை நன்கு மசித்து அதனுடன் அவகேடா பழத்தினையும் கலந்து பேஸ்ட் தயாரித்து பாதத்தில் பயன்படுத்த வறட்சியால் ஏற்படும் சருமத்தை மிருதுவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. வெடிப்புகள் மறையும் மற்றும் பாதத்தில் இருக்கும் கடினமான சருமத்தை மென்மையாக மாற்றும்.
சூடான நீரில் வைக்க வேண்டும் :
பாதத்தில் இருக்கும் நுண் கிருமிகளை அழிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்க வாய்த்த நீரினை எடுத்து கொண்டு சிறிது சூடு தணிந்த பிறகு கால்களை அதனுள் வைத்து கொள்ளுங்கள், சிறிது நேரங்கள் கழிந்த பின்னர் கால்களை எடுத்து விடுங்கள்.