கார்போஹைட்ரேட் உணவுகளை குறைந்த அளவிலே உட்கொள்ள வேண்டுமா? இதோ வழிகள்!
Sat, 23 Sep 2017

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என்பதை தெரிந்து உண்ண வேண்டும். கொழுப்பு சத்துக்கள் குறைவாக இருக்கும் உணவு பொருட்களையே உட்கொள்ள வேண்டும்.
உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும் என்பதால் முதலில் அதிக பசி எடுப்பதை தவிர்க்க வேண்டும், அதற்கு நீங்கள் அதிகம் புரதம் இருக்கும் உண்வுகளையே உட்கொண்டால் அதிக பசி எடுக்காது.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
- கார்போ உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் அப்படியே சாப்பிடாமல் சமைத்து உண்ண வேண்டும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இப்படித்தான் சாப்பிட வேண்டும்.
- ஸ்டார்ச் இருக்கும் உணவுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- காலை எழுந்தவுடன் அருந்தும் காப்பியில் சர்க்கரை சேர்க்காமல் அருந்த வேண்டும் மற்றும் இனிப்பு சுவை கொண்ட பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.
எந்த ஒரு உணவையும் ஒரே நேரத்தில் அதிகம் உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்து, சிறிது நேரம் கடந்த பின்னரே உண்ண வேண்டும் என்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். மாவினால் உருவான பொருட்களை அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது.
உண்ண வேண்டியவை :
- மற்ற உணவுகளை பார்க்கும் பொழுது காய்கறிகள் மற்றும் பழங்களில் கொழுப்பு சத்துக்கள் குறைவாக காண படுவதால், இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்ள ஆரோக்கியமும் மற்றும் உடல் எடையும் அதிகரிக்காது.
- போர்டோபெல்லோ மஷ்ரூமை பயன்படுத்தி தயாரான உணவு பொருட்களை சாப்பிடலாம், உடலுக்கு நன்மையும் கூட.
- காலை உணவிற்கு இட்லி, தோசை போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். கார்போஹைட்ரேட் குறைய வேண்டும் என்பதற்காக காலை உணவை தவிர்க்க கூடாது, புரதம் குறைவாக இருக்கும் .உணவை எடுத்து கொள்ளுங்கள்,