அவல் எப்படியெல்லாம் சாப்பிடனும் தெரியுமா???

வெள்ளை நிறத்தில் தோற்றம் அளிக்கும் இந்த அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அரிசியின் மறு உருவமே அவல்.
இதை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருவேளை உணவாகவும் எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு அவலுடன் சிறிதளவு சர்க்கரை கொஞ்சம் நீர் கலந்து கொடுக்க சத்துக்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல் இனிப்பான நல்ல உணவாகவும் அல்லது திண்பண்டமாகவும் கொடுக்கலாம்.
இதை பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது வேக வைத்து நெய் அல்லது வெண்ணெய் கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து உண்ண அவலில் இருக்கும் சத்து நமக்கு கிடைக்கும்.
உடல் சூட்டையும் தணித்து நல்ல புத்துணர்ச்சியை கொடுத்து சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும் மற்றும் சீத பேதி போன்ற நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ளும்.
அவலை வேக வைத்து அதனுடன் தயிர் அல்லது மோர் கலந்து கட்டியான பதம் வந்த பிறகு உண்ண உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.