எள் தெரியும்! அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கியம் தெரியுமா?
Fri, 1 Sep 2017

எள் சமையலுக்கு மட்டும் பயன்படுவது இல்லை நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்சாகவும் பயன்டுகிறது.
எள்ளின் ஆரோக்கியம் :
எள்ளை பயன்படுத்தி எள் உருண்டை, எள் புண்ணாக்கு செய்து சாப்பிட உடலுக்கு ஊட்ட சத்துக்களை கொடுக்கும்.
- நம் உணவில் சேர்க்கு எள்ளு பொடியால் எலும்புகளுக்கு வலிமையை கொடுத்து வலி நிவாரணியாக கருதப்படுகிறது.
- ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருக்கும் இதை நாம் சாப்பிட சுவாச கோளாறுகள் தீரும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும்.
அதிக புரோட்டின் சத்துக்களை கொண்ட எள்ளை எண்ணெயாக தயாரித்து சருமத்தில் பயன்படுத்த நல்ல பொலிவை பெறலாம், சுருக்கங்கள் மறையும், கருமை நிறம் வெண்மையாக மாறும்.
- எள்ளில் இருக்கும் மெக்னீசியம் பற்களுக்கு வலிமையை கொடுத்து வெண்மையை பற்களை கொடுக்கிறது.
ஆரோக்கியமான இதயத்தை பெறலாம், நீரழிவு நோயில் இருந்து விடுதலை காணலாம். கடின உணவுகளை விரைவில் செரிக்க செய்து உடலை பராமரிக்கிறது.
- ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்கள் எள்ளை தினம் உணவில் சேர்த்து கொள்ள நல்லதொரு அருமருந்து.