சேனைக் கிழங்கின் நன்மைகள் இவைகள்தான்!!

சேனைக்கிழங்கும் கருணைக் கிழங்கினைக் போன்று பலரால் விரும்பி சாப்பிடப்படாத கிழங்கு வகையாக இருந்து வருகின்றது, இதனை குழம்பாக வைப்பதைவிட வறுவலாக செய்து கொடுத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
இப்போது நாம் சேனைக் கிழங்கில் உள்ள நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். சேனைக் கிழங்கானது எலும்பினை வலுவாக்குகின்றது, மேலும் இது இதய நோய்களினை சரி செய்வதாகவும், மேலும் இதய நோய் வராமல் தடுக்கவும் செய்கின்றது.
மேலும் இதில் சர்க்கரை அளவானது குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் தயங்காமல் சாப்பிடலாம். இது நிச்சயம் சர்க்கரையினைக் கட்டுக்குள் வைக்கவே செய்கிறது.
மேலும் இது கெட்ட கொழுப்பினைக் கரைப்பதால், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கொடுத்துவந்தால் எலும்பின் உறுதியானது அதிகரிக்கும், மேலும் 30 வயதைக் கடந்த பெண்கள், முதியோர்கள் என அனைவரும் சாப்பிட்டால் எலும்பின் உறுதி வலுவாக இருக்கும்.
மேலும் இது செரிமானப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது. மேலும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சரி செய்கின்றது.