Tamil Wealth

கத்தரிக்காயின் நற்பண்புகள் பார்க்கலாமா?

கத்தரிக்காயின் நற்பண்புகள் பார்க்கலாமா?

கத்தரிக்காயை  யாரும் அதிகம் விரும்புவதே இல்லை  அவர்களுக்கு இதில் இருக்கும் நன்மைகள் தெரிய வில்லை என்பதே உண்மை.

நமக்கு ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவும் கத்தரிக்காயில் நோய்  எதிப்பு சக்தி அதிகமாகவே  இருக்கிறது.

முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவோர் கத்தரிக்காயை உணவில் சேர்த்து  கொள்ள, முகத்தில் ஏற்படும் பருக்கள், எண்ணெய் கசடு அனைத்தும் நீங்கி அழகை பெறலாம்.

இதயத்திற்கு செல்லும் நரம்புகளுக்கு வலு கொடுத்து  ரத்தத்தை  சுத்திகரித்து  ஆரோக்கியத்துடன் வாழ செய்யும் தன்மை கத்தரிக்காயிக்கு இருக்கிறது.

மூளைக்கு செல்லும் நரம்புகளையும் பராமரித்து மூளையின் செயல் திறனை  அதிகரிக்க செய்து, புத்துணர்ச்சியை கொடுத்து உற்சாகத்துடன் செயல் பட செய்யும்.

இன்று பாதி பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதை கட்டு படுத்த வேண்டு என்று எண்ணுவோர் கத்தரிக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடலை தாக்கும் பாக்டீரியாக்களை கொன்று உடலை காத்து கொள்ள உதவுகிறது கத்தரிக்காய்.

Share this story