கண்டங்கத்திரியின் ஆரோக்கியம் பார்க்கலாமா??

உடலின் அதிக வியர்வையால் ஏற்படும் துர்நாற்றங்களுக்கு இதன் சாற்றை கொண்டு உடல் முழுவதும் தேய்த்து பின் குளிக்க வேண்டும். கால்களில் ஏற்படும் வெடிப்புகள் தழும்புகள் அனைத்திற்கும் இதன் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி, வெடிப்பு இருக்கும் இடங்களில் இறுக்கமாக கட்டி வைக்க வேண்டும். ரத்த கசிவு ஏற்பட்டாலும் இந்த முறையை செய்ய விரைவில் குணம் அடையும்.
அதிமான சளி தொல்லையால் சளி நெஞ்சில் அடைத்து கொண்டு ஏற்படும் நெஞ்சு வலி, எரிச்சல் போன்றவைகளுக்கு கண்டங்கத்திரியை சமைத்து சாப்பிட பலன் அடையலாம். இதன் பழத்தை அரைத்து பொடியாக்கி சாப்பிட அடிக்கடி ஏற்படும் இருமலை தவிர்க்கலாம்.
கண்டங்கத்தியை குழம்பாக வைத்து சாப்பிட கண் பார்வை தெளிவு பெறும் மற்றும் கண் தொடர்பான எவ்வித கோளாறுகளும் நம்மை அணுகாது.
இதை தைலமாகவும் காய்ச்சி வலி இருக்கும் இடங்களில் தேய்த்து வர கொஞ்சம் கொஞ்சமாக வலி, வீக்கம் குறைவதை காணலாம்.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது கண்டங்கத்திரி.