பழம்பாசியின் நன்மை பார்க்கலாமா ?
Sep 5, 2017, 15:30 IST

பழம்பாசியின் நன்மைகள் :
வேர்களின் எண்ணெய்கள் புண்கள் மற்றும் அடிபட்ட இடங்களில் பயன்படுத்த பலன் கிடைக்கும் மற்றும் வலிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
- பழம்பாசியில் இருக்கும் இலைகளில் இருந்து எடுக்கபடும் சாற்றின் மூலம் கை, கால்களில் ஏற்படும் கட்டிகள், ரத்த கசிவுகள் போன்றவற்றிக்கு பயன்படுத்த விரைவில் குணம் ஆகும்.
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த சரக்கரை அளவை குறைத்து, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் போன்ற குறைபாடுகளை சரி செய்யும் விதத்தில் மிகவும் பயன்படுகிறது.
இதன் இலைகளை காய வைத்து அதனை பொடியாக்கி பாலுடன் அல்லது நீருடன் கலந்து தினம் குடிக்க அதிகமான வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டிற்கும் மற்றும் மூல சூட்டிற்கும் பயன்படுத்தலாம்.
அதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர் பழம்பாசியின் இலைகளை தினம் உண்ண நாளடைவில் உங்கள் எடை குறைந்து நல்ல உடல் தோற்றத்தை பெறுவீர்கள்.
இதில் காணப்படும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நரம்புகளில் ஏற்படும் கோளாறு அனைத்தையும் நீக்கும்.