சாத்துக்குடி ஜூஸை தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தும் முறை!!

சாத்துக்குடி ஜூஸை தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தும் முறை!!

சாத்துக்குடி ஜூஸை குடித்து வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். இந்த ஜூஸை குடிப்பது மட்டுமில்லாமல் தலைமுடியில் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான தலைமுடியினை பெறலாம். இதற்கு காரணம் இதில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் – சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் தான். இதை தலைமுடிக்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

சாத்துக்குடி ஜூஸை தலைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தும் முறை:-

  • சாத்துக்கு டி ஜூஸுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலைமுடியை அலசினால் கூந்தல் மிருதுவாகவும், பளபளபாகவும் மாறும்.
  • இந்த சாறை தலைமுடியில் தடவினால் இதில் உள்ள வைட்டமின் – சி சத்து தலைமுடிக்கு நேரடியாக கிடைக்கிறது. இதன் மூலம் தலைமுடியின் வலிமை அதிகரிக்கும்.
  • நரைமுடி பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் ஹென்னா பவுடரை சாத்துக்குடி ஜூஸ் சேர்த்து கலந்து பசையாக்கி தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் நரைமுடி பிரச்சனை நீங்கும்.
  • முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனை இருப்பவர்களும் இந்த ஜூஸை தலைமுடிக்கு பயன்படுத்தினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Share this story