அழகை அள்ளி தரும் குங்கும பூ!!

கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்று பாலில் குங்கும பூவை கலந்து குடிக்கலாம்.
கண்ணில் பூ விழுதல், வாந்தி, வயிற்றில் ஏற்படும் கிருமிகளை அழிக்கும் குணம் கொண்ட குங்கும பூவை எடுத்து கொள்ளுங்கள் பயனை பெறுங்கள்.
இதய கோளாறுகளுக்கும் மற்றும் மூளை தொடர்பான கோளாறுகளுக்கும் குங்கும பூ நல்ல பயன் உள்ளது. சிறுநீர் போக்கு தடைபட்டால் இதை பயன்படுத்த நல்ல பலனை பெறலாம்.
அதிகப்படியான ரத்த போக்கை குண படுத்த குங்கும பூவை சோம்பு நீரில் கலந்து குடிக்கலாம்.
அழகு சேர்க்கும்:
குங்கும பூவை தொடர்ந்து சிறியவர் முதல் பெறுவயவர்கள் வரை பால் அல்லது மற்ற நீர் ஆகாரங்களுடன் சேர்த்து அருந்த நல்ல உடல் அழகையும் பெறுவதோடு ஆரோக்கியமான வாழ்வையும் பெறலாம். இவை ரத்த அணுக்களையும் அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்து சீராக செயல் பட செய்யும். மேனி பள பளப்பு கொடுக்கும். இதனை பொடியாக்கியும் தினமும் உட்கொள்ளலாம்.