அழுக்குகள் படியும் நகத்தை சுத்திகரிக்க பயன்படும் வைத்தியம்!

பெண்கள் அனைவரும் தங்கள் நகங்களை அழகு படுத்த வேண்டும் என்று நினைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள், அதனால் நகத்தில் ஏற்படும் அழுக்குகள் அனைத்தும் நீக்க சில வழிமுறைகளை தெரிந்து பயன்படுத்துங்கள்.
நகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டுமா ?
நகத்தின் பராமரிப்பு மிகவும் முக்கியம் நம் ஆரோக்கியத்திற்கு. நகங்களில் படியும் கறைகளையும் நீக்க சில குறிப்புகள் இருக்கின்றன.
சிலருக்கு நகங்களில் ஏற்படும் வெள்ளை திட்டுகள் அல்லது இதர கறைகளை போக்க பயன்படும் சோடா.
சோடா பயன்படும் முறை :
நகங்களில் இருக்கும் கறைகளை நீக்க சோடாவுடன் வெந்நீரை கலந்து துணியை உபயோக படுத்தி சிறிது தொட்டு தொட்டு நகங்களை சுற்றி அனைத்து புறங்களிலும் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து வெறும் நீரில் கழுவ நகங்களில் இருக்கும் கறைகள் நீங்கும்.
எலும்பிச்சை பயன்படும் முறை :
எலும்பிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சாற்றினை தனியே பிரித்து எடுத்து துணியினை பயன்படுத்தி சாற்றில் நன்கு நனைத்து நகங்களில் தேய்க்க வேண்டும், இதனை கறை ஏற்படும் நேரங்களில் பயன்படுத்த நல்ல பலனை கொடுத்து அழகான நகங்களை கொடுக்கும்.
- மேற்கூறிய வழிமுறைகளை செய்து பின்னர் நகங்களில் அழகிற்கு நக பூச்சை பயன்படுத்துங்கள் விரல்கள் அழகான தோற்றத்துடன் காண படும்.