குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை உணருங்கள்!

குழந்தைகளை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள வேண்டும் மற்றும் சத்தான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு அளவுக்கு அதிகமான உணவுகளை கொடுக்கும் பழக்கம் இன்று அதிக பெற்றோர்களிடத்தில் காண படுகிறது.
உணவு :
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் அவர்களுக்கு போதுமான உணவுகளை கொடுக்க வேண்டும், அவர்கள் போதும் என்று சொன்னாலும் விடுவதில்லை, சத்துக்கள் இருக்கிறது சாப்பிட்டால் நல்லது என்று சொல்லி உணவுகளை திணிக்கிறார்கள். இது முற்றலின் தவறான விஷயம். அவர்களின் விருப்பத்திற்கே கொடுக்க வேண்டும், நீங்களே திணிக்க கூடாது. இதனால் அவர்களுக்கு உடல் நல கோளாறுகள் வரும் மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனைகள் வர கூடும்.
நொறுக்கு தீனிகள் :
சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸ் அவர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை கொண்டு உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளின் வயதினை பொறுத்தே அவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை கொடுக்க வேண்டும். 10 வயது குழந்தை என்றால் அதற்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகளே போதுமானது, அதற்குமேல் அவர்களுக்கு கொடுக்க கூடாது. இதில் நீங்க அதிக நொறுக்கு தீனிகளை கொடுத்தால் இதிலே அவர்களுக்கு பசி தீர்ந்து விடும், பிறகு எப்படி சத்துள்ள உணவுகளை கொடுப்பீர்கள், சிந்தித்து செயல் படுங்கள்.
ஆரோக்கியம் முக்கியம் :
குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை கொடுத்து பழக்குங்கள். வெளியே விற்பனை ஆகும் உணவுகளையோ அல்லது குளிர்பானங்களையோ கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் உணவுகளை கொடுக்க கூடாது.
நேரத்தை கடைபிடிக்க வேண்டும் :
குழந்தைகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க வேண்டும், இது அவர்களின் செரிமானத்தை சீராக நடைபெற செய்யும். நேரத்தில் தாமதம் இருந்தால் மெட்டபாலிசம் பாதிக்கும்.
வளர்ச்சி :
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மூன்று வேளை உணவுவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும், ஸ்னாக்ஸ் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்து கொள்ளலாம்.