புகைபிடித்தல் பழக்கத்தை கைவிடுங்கள்? அதற்கான சில வழிமுறைகள்!
Thu, 21 Sep 2017

புகைபிடிப்பதால் உண்டாகும் தீமைகள் தெரிந்தும் அதை செய்கிறார்கள். அதில் அடிமை ஆகி பின் அதில் இருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் பழக்கத்தை பற்றியே சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு சில டிப்ஸ் இதோ.
- புகையிலையில் இருக்கும் நிகோடின், தார், கார்போன் மோனோ ஆக்சைட் போன்றவை உடலுக்கு கேடு விளைவிப்பதே. புகை பிடிப்பதில் பல முறைகள் வந்துவிட்டன.
- புகை பிடித்தலை தவிர்ப்பது நம் சிந்தனையில் இருக்கிறது, அதேப்போல் கட்டு படுத்துவதும் நாம் நினைத்தால் முடியும், இல்லையென்றால் அதற்கென்று விற்பனை ஆகும் மாத்திரைகள், சிகிச்சை முறைகள், மருத்துவரின் ஆலோசனையின் படி மேற்கொள்ளலாம் மற்றும் பேட்ச் , இன்ஹேலர் ,கம் போன்றவைகளும் உள்ளன.
- புகை பிடிக்க வேண்டும் என்ற சிந்தனை எழும் பொழுது, கவனத்தை திருப்புங்கள். புகையிலையை விடும் எண்ணம் வந்துவிட்டால் அதிகமாக புகையிலை விற்பனை ஆகும் இடங்களுக்கும், புகைபிடிப்பவர்கள் இடத்தில் இருபவர்களிடமும் செல்லாமல் இருங்கள். அது உங்களை மீண்டும் அதில் தள்ளாமல் அந்த ஞாபகத்தையே கொண்டு வராது.
- மன நிலையை மாற்றுங்கள், நீங்க பிடிக்கும் புகையிலை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் என்ற எண்ணத்தை கொண்டு வாருங்கள். சிகெரெட்டில் இருந்து வெளிப்படும் புகை அருகில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களை கூட பாதிக்கும், நுரையீரல்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
- தார் ,மற்றும் கார்போன் மோனோ ஆக்சைட் இந்த இரண்டும் தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும், உள் உறுப்புகளை அதிகம் சேத படுத்துகிறது. ரத்தத்தை அசுத்த படுத்தி, கல்லீரலில் ரத்த கசிவை ஏற்படுத்தும், பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.