ருசி மிகுந்த சீதா பழத்தின் குணங்கள்!

ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளின் அறிவு திறனுக்கு ஏற்ற இது நல்ல நினைவாற்றலை கொடுக்கும்.
உடல் எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும், உடல் பலவீனமாக காணப்படுபவர்கள் இதை சாப்பிட இதயம் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சீராக செயல் பட்டு ஆஸ்துமா வராமல் கட்டு படுத்தலாம்.
சீதா பழத்தில் அதிகம் இருக்கும் விதைகளை வீணாக்காமல் அதையும் பயன்படுத்தி அழகு பெறலாம், விதைகளை நன்கு அரைத்து கடலை மாவு, கஸ்தூரி மஞ்சளும் சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்த நல்ல அழகான தோற்றத்தை பெறலாம்.
முக பருக்கள் மறைய சீதா பழத்தை முகத்தில் பரு இருக்கும் இடங்களில் தொடர்ந்து பயன்படுத்த பரு மறைந்து முகம் நல்ல நிறத்தை கொடுக்கும்.
விதைகள் மட்டுமல்லாமல் அதை இலைகளையும் அரைத்து சாப்பிட சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு மருந்து.
உடலில் ரத்தம் இல்லை என்று கவலை படுவோர் இதை தினமும் சாப்பிட்டால் உடலில் ரத்தம் ஊறும்.