தண்ணீரில் நடந்த பின்னர் கால்களை பாதுகாக்க வேண்டும்!

சில நேரங்களில் தண்ணீரில் நடக்கும் சூழ்நிலை உருவாகும் அது நல்ல நீரோ அல்லது கெட்ட நீரோ என்பது தெரிவது இல்லை. அது கேடு விளைவிக்கும் நீராக இருந்தால் நம் கால்களின் மூலம் உடலில் நோய் தொற்றுகள் பரவி ஆரோக்கியத்திற்கே கேடு தரும். பல உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கால்களில் எப்பொழுது காலணி அணிந்தே வெளியில் செல்வதை பழகுங்கள், முடிந்த அளவு மூட்டு வரை அணிய நல்லது.
கால்களில் தேங்காய் எண்ணெய் தினம் தடவ அது எவ்வித பூச்சிகளின் கடிகளினால் உருவாகும் கட்டிகளையும் ஏற்படுத்தாமல், காலில் அழுக்குகள் சேராமல் நம்மை பராமரிக்கும்.
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் பொழுது எப்பொழுதும் கால்களை நன்கு கழுவிய பின்னரே செல்வது நல்லது, முக்கியமாக குழந்தைகள் இருக்கும் இடங்களில் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
முகத்திற்கு பயன்படுத்தும் முல்தானி மட்டியை கால்களுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் வேப்பிலை சாற்றினை கலந்து உபயோகிக்க நல்ல பலன் கிடைக்கும்.