குடல்களில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டுமா? இதை படிங்க!

உறுப்புகளில் குடல்களின் செயல் பாடு மிக முக்கியமே. குடல்கள் தான் உடலில் இருக்கும் கிருமிகளை, கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது.
உண்ணும் உணவுகள் பொறுத்தே அமையும் :
நாம் உண்ணும் உணவை பொறுத்தே குடல்களின் சுத்தம் இருக்கிறது. நாம் உண்ணக்கூடிய உணவுகள் நமக்கு ருசியாக இருக்கிறதா என்பதை மட்டும் பாராமல் அதனால் நமக்கு ஏதேனும் குறைபாடுகள் வருமா என்பதனையும் நன்கு யோசித்த பின்னரே சாப்பிட வேண்டும். குடல்களில் பருமன் சிறியது, ஆகையால் உண்ணும் உணவிலும் கட்டுபாடு வேண்டும். சிலருக்கு நொறுக்கு தீனி தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், அதனால் எப்பொழுதும் வாய் ஆசை போட்டு கொண்டே இருக்கும் இதனால் குடல்களில் அளவு பெரிதாகும், செரிமானமும் நடைபெற நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் வயிற்று கோளாறுகளும் உண்டாகும். சாதம் சாப்பிடும் பொழுது தயிர். மோர் கலந்து உண்பதும் குடல்களில் ஆரோக்கியத்திற்கு நல்லதே.
இனிப்புகள் :
நாக்கிற்கு இனிப்பு சுவை கொடுக்கு பயன்படுத்தும் சர்க்கரையை தவிர்த்து தேன், கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றை உபயோகிக்க எளிதில் குறைபாடுகள் வராது.
இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வது நல்லது :
குளிர்பானங்களை தவிர்த்து, இயற்கை முறையில் உருவாக இளநீர், நீர், பழ வகைகளின் மூலம் உருவான ஜூஸ் போன்றவற்றை அருந்தலாம், அதிகமான குளிர்ச்சியுடனும் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. மது அருந்துவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் அதில் இருக்கும் நச்சுக்கள் குடல்களில் கீறல்களை உண்டு பண்ணும், உட்புறத்தில் ரத்த கசிவை ஏற்படுத்து பல விளைவுகளை ஏற்படுத்தும்.