சருமத்தை பராமரிப்புக்கும் மற்றும் முடிகளின் பராமரிப்புக்கும் உதவும் பொருட்கள் !

நம் சருமத்தையும் மற்றும் முடியையும் பராமரிக்க உதவும் பப்பாளி பழத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
முகத்தில் ஏற்படும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை போக்க பப்பாளி சதை பற்றை நன்கு மசித்து தினம் முகத்திற்கு பயன்படுத்தலாம் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.
தயிரை பயன்படுத்தலாம் :
சருமத்தில் ஏற்படும் எண்ணெய் கசடுகளை குண படுத்தவும், அதனால் ஏற்படும் பருக்கள், தழும்புகளை போக்க உதவும் மற்றும் தலையில் இருக்கும் பொடுகுகளை நீக்கவும், வேர் நுனிகளில் புத்துணர்ச்சியை கொடுத்து நீளமான கூந்தலை கொடுக்கும். தயிருடன் தேனை கலந்து முகத்திற்கும் மற்றும் முடிகளில் வளர்ச்சிக்கும் பயன்படுத்த ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் நல்ல மாற்றத்தை காணலாம்.
முடிகளின் வளர்ச்சி :
அழகான முடிகளை பெற எலும்பிச்சை சாறுடன் நீரினை கலந்து நன்கு காய்ச்ச வேண்டும். இதில் இருந்து கிடைக்கும் தைலம் தினம் தலைக்கு பயன்படுத்த முடிகளில் இருக்கும் அழுக்குகள் நீங்கும் மற்றும் சுருள் முடிகளை நேராக மாற்றும் ஆற்றல் கொண்டது, எலும்பிச்சையை முகத்திற்கும் பயன்படுத்த கருமை நிறம் மாறி வெண்மை தோற்றத்தை கொடுக்கும்.
நீர் முக்கியம் :
நீர் என்பது நமது வாழ்வில் மிகவும் முக்கியமானது. இதனை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் போலவே பயன்படுத்தவும் நல்ல ஆரோக்கியத்தை தரும், முகத்தை ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை கழுவ வேண்டும் மற்றும் தலை முடி பராமரிப்பு வாரத்திற்கு இரு முறை தலை முடியை நீரினை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஐஸ் கட்டி :
எலும்பிச்சை சாறுடன் தேனை கலந்து முகத்தில் பயன்படுத்த வேண்டும். அதன் மேல் ஐஸ் கட்டிகளை கொண்டு தேய்க்க வேண்டும். இது உங்கள் சருமத்தை பிரகாசமான தோற்றத்துடன் வைத்து கொள்ளும். தேனை மட்டும் தலைகளின் வேர் நுனிகளில் நன்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இது உங்கள் முடிகளின் பராமரிப்புக்கு மிகவும் நல்லது.