குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்க உதவும் பொருட்கள்!

சிறு குழந்தைகளுக்கு தேவையான போஷாக்கையும் கொடுத்து அவர்களின் அறிவு திறனையும் வளர்க்கும் விதமாக பயன்படுத்த வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி :
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான DHA இருக்கும் உணவுகளையே அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். DHA போலவே இதர சத்துக்களான ALA மற்றும் EPA போன்றவைகள் அனைத்தும் நீர் வாழ் உயிரினங்களிலே அதிகம் காண படுகிறது. சால்மன், சர்டைன், அன்கோவி போன்ற அசைவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை மூளைக்கு வளர்ச்சியை கொடுத்து ஞாபக திறனையும் அதிகரிக்கும் மற்றும் சிறப்பாக செயல் பட செய்யும்.
குழந்தைகளின் ஆரோக்கியம் :
குழந்தைகளுக்கு ஒமேகா 3-ஆல் உடலில் ஏற்படும் பல குறைபாடுகளை குணம் ஆக்கும் ஆற்றல் கொண்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக இதயத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் பண்பு உள்ளது.
பல வித நோய் தொற்றுகளிடம் இருந்து பராமரிக்கும் ஒமேகா-3 உடலில் ஏற்படும் அனைத்து வீக்கங்களையும் குண படுத்தும். அதிக கொழுப்புகளால் ரத்த தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளை போக்கும் தன்மை கொண்டது.
கல்விக்கு தேவையான அறிவு திறனை கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும் மற்றும் உணவுகளின்
ஒவ்வாமையால் ஏற்படும் வயிற்று கோளாறுகளை நீக்கும், எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி சிறப்பாக செயல் ஆற்றும் திறனை கொடுக்கிறது.
ரத்தத்தை சுத்திகரித்து சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும் மற்றும் கண்களில் ஏற்படும் குறைபாடுகளையும் சரி செய்து தெளிவான பார்வையை கொடுக்கும்.
ஒமேகா 3 குறைவதால் ஏற்படும் குறைபாடுகள் :
- கல்வியில் கவனம் செலுத்த முடியாது
- குழந்தைகளின் செயல்களில் மாற்றங்கள் உண்டாகும்
- கண்களில் பார்வை மங்கிய நிலையில் காண படும்
- மூளையின் செயல் திறன் குறையும்