Tamil Wealth

பாவட்டை குணங்கள் அறிவோமா!!

பாவட்டை குணங்கள் அறிவோமா!!

அழகான பச்சை தோற்றத்துடன் வெண்மை நிற மலர்களை கொண்டது தான் இந்த பாவட்டை. அடிக்கடி பூக்காது இந்த பூக்கள் மாதத்திற்கு இரு மாதங்கள் பூக்கும் தன்மை கொண்டது.

பாவட்டை குணாதிசயங்கள் :

வாத கோளாறுகள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் இதில் இருக்கும் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உதவுகின்றன. வாதத்திற்கு என படைக்கப்பட்ட ஒரு அற்புத மருந்தே இந்த பாவட்டை.

பாவட்டை பூக்கள் மட்டுமல்லாமல் அதன் இலைகள், வேர்கள், பட்டைகள் என அனைத்தும் நமக்கு நன்மை பயக்க கூடியது.

இதன் வேர்களை நீருடன் சேர்த்து கொதிக்க வீட்டுக்கு அதன் நீரை வடிகட்டி தினம் குடித்து வர உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நோய் தொற்றுகளிடம் இருந்து காக்கிறது மற்றும் வாத நோய்கள் வராமலும் தற்காத்து கொள்ளும்.

பாவட்டை வேர்களை நமக்கு ஏற்படும் கட்டிகள், தழும்புகள் குணம் ஆக பயன்படுத்தலாம். முக்கியமாக அரையாப்பு கட்டிகள் குணம் ஆக இதன் வேர்கள் பெரும் பங்கு வகிக்கும். கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை காணலாம்.

Share this story