உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதற்கான காரணங்கள் எவை?

உடல் பருமன் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பினும், அவற்றில் முக்கியமானதாக இருப்பது உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதுதான். அந்த கெட்ட கொழுப்பினை உடலில் சேரவிடாமல் செய்ய என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நாம் சாப்பிட்டு முடித்தவுடன் உறங்கச் செல்லாமல் ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. இதனால் உணவானது முழுமையாக செரிக்கப்படும். அதேபோல் சாப்பிடும் உணவினை நன்கு அரைத்து விழுங்குதல் வேண்டும்.
அவ்வாறு அரைத்து சாப்பிடும் பட்சத்தில் கொழுப்புகள் அப்படியே தங்கிவிடாமல் நாம் பாதுகாக்க முடியும். மேலும் குறைந்தது 1 மணி நேரம் நடைப் பயிற்சி செய்வது நல்லது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்தால் கொழுப்பு கொஞ்சமும் குறையாது.
இதனால் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் கெட்ட கொழுப்பினை அதிகரிக்கும் உணவுகள் குறித்து அறிந்து அவற்றைத் தவிர்த்தல் நல்லது. அதாவது கெட்ட கொழுப்பினைக் கரைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கும் உணவுகளான பார்லி, ஓட்ஸ், நட்ஸ், பீன்ஸ், மீன், முட்டை போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.