ஆரோக்கியத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் தாவரங்கள்!

வேம்பின் மூலிகை குணங்கள் :
வேம்பின் சாற்றினை தினம் குடித்து வர உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை கொடுக்கிறது, வேம்பின் கசப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றன. இதனை தினம் குடிப்பதால் எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாக மாட்டோம். வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா போன்றவைகளின் மூலம் ஏற்படும் வியாதிகளையும் தடுத்து நம்மை பாதுகாக்கிறது.
கொத்தமல்லி :
வீட்டில் சமையலில் நறுமணத்தை கொடுக்கும் கொத்தமல்லியில் இருக்கும் ஆன்டி மைக்ரோபையல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து, எவ்வித தொற்றுகளும் நம்மை அண்டாமல் காத்துக்கொள்கிறது. உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது மற்றும் சர்க்கரை வியாதி இருபவர்களுக்கு உதவும், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் போக்க உதவும் நல்லதொரு மருந்தாக கருத படுகிறது.
புதினா இலைகள் :
புதினா இலைகளை கொண்டு துவையல் செய்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை சரி செய்யும் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கி இருப்பதால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், புண்களை குண படுத்தும் மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அரிப்புக்களை குணம் ஆக்கும் சிறந்த மருந்து.
மில்க் த்ரிஸ்டில் :
உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்ற உதவும் இது உடல் உபாதைகளை போக்கவும் வல்லது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து இறந்த செல்களை அகற்றி ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல் படுகிறது.
திரிபலா :
உடல் உபாதைகளை போக்க திரிபலாவுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்து அரைத்து நீருடன் கலந்து நன்கு கொதித்த பின்னர் அருந்த நல்ல பலனை கொடுக்கும்.