அன்னாசி பழம் தரும் மருத்துவ குணங்கள்!

அன்னாசி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றே அன்னாசி.
குணங்கள் :
பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் கொண்டு உள்ளது. தினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும்.
நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.
ரத்த குறைபாடுகளால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் அன்னாசி பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம் மற்றும் ரத்த அளவையும் அதிகரித்து அதனால் எந்த பாதிப்புகளும் வராமல் தற்காத்து கொள்ளும்.
வைட்டமின் பி அதிகம் காண படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாலுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும், இதனை தினம் வழக்க படுத்தி கொண்டு வர நோய்கள் நம்மை அணுகாது.