நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும் அன்னாசி பழ ஜூஸ்!
Sep 11, 2017, 19:45 IST

- அன்னாசி பழத்தை கொண்டு ஜூஸ் தயாரித்து தினம் குடித்து வர நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பராமரிக்கிறது. புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுக்கும் விதத்தில் அன்னாசியில் காண படும் ப்ரோமெலைன் மற்றும் பீட்டா கரோடின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு இப்பழத்தை சாப்பிடலாம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு உறுதியை கொடுத்து செரிமானம் சிறப்பாக நடைபெறும், மன நிலை சரி இல்லாத நிலை மற்றும் குழப்பமான நிலையில் இருந்தால் இதை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
- கீல்வாதத்தை போக்க பயன்படும் என்சைம் இந்த பழத்தில் அதிகம் காண படுவதால் விரைவில் குணம் ஆகும்.
- அன்னாசியில் இருக்கும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும் விதத்தில் முக்கியமானதாக பயன்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை குறைத்து, இதில் இருக்கும் வைட்டமின் பி நீரழிவு நோயில் இருந்து விடுதலை தரும்.