வெற்றிலை போட்டு பயனை பெறுங்கள்!!

வெற்றிலையை பாட்டிமார்கள் அதிகம் உண்பதையே கண்டவர்களுக்கு. அதை நாமும் சாப்பிட்டு பயன் பெறலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வெற்றிலையின் சிறப்பு :
குழந்தைகள் விளையாட்டில் மூழ்கி பசி எடுக்க வில்லை என்று கூறினால் அவர்களுக்கு வெற்றிலையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து கொடுக்க நல்ல பசி எடுக்கும், அவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.
கபம் கரைய இஞ்சி சாறுடன் வெற்றிலையும் சேர்த்து கலந்து குடித்து வரலாம். சளி தொல்லை அதிகம் இருந்தால் இதனுடன் மிளகு சேர்த்து அருந்த நல்ல பலனை கொடுக்கும் மற்றும் இருமலும் குணம் ஆகும்.
பத்து போட்டு தலை வழியை போக்கும் வெற்றிலை. உணவு எவ்வளவுதான் அதிகம் சாப்பிட்டாலும் சாப்பிட பின் ஒரு வெற்றிலை வாயில் இட்டு சுவைக்க சாப்பிடவை அனைத்தும் செரிமான அடைந்து காணாமல் போய்விடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டதே.
தேனுடன் கலந்து அருந்த பலவீனமான உடம்பு தெம்பு கொடுக்கும் மற்றும் நரம்பு தளர்ச்சி இருந்தால் குணம் ஆகும்.