பசியினைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சியா விதைத் தண்ணீர்

உடல் எடையினைக் குறைக்க வேண்டும் என்பது உடல் பருமன் கொண்டோருக்கான ஒரு ஆசை என்பதைவிட, ஒரு கனவு என்றே சொல்லலாம். அதிலும் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் துவங்கி பக்கத்து வீட்டுக்காரர் டிப்ஸ், சக ஊழியர் டிப்ஸ், கூகுளில் தேடல் என அவர்கள் பின்பற்றாத டிப்ஸ்னு ஒண்ணு இருக்கவே இருக்காதுங்க.
அந்தவகையில் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது சியா விதைகள்தாங்க. சியா விதைகள் மெக்சிகோவில் இருந்து கிடைக்கும் இந்த விதைகள், சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கப் பெறுகிறது.
பலரும் சியா விதைகளையும், சப்ஜா விதைகளையும் குழப்பிக் கொள்வதுண்டு, ஆனால் இவை இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த சியா விதை உடல் எடையினைக் குறைப்பதோடு முக அழகு, நகம் பளபளப்பு, முடி வளர்ச்சி என பல பலன்களைக் கொண்டுள்ளது.
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதுதான் சரியான முறையாகும், இதுகுறித்த ஒரு சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் வீரர்களுக்கு நீரில் ஊறவைத்த சியா விதையின் தண்ணீரையே பருகக் கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.
அதாவது இந்த சியா விதைத் தண்ணீரானது பசி உணர்வினைக் கட்டுக்குள் வைக்கும் ஒன்றும் கூறப்படுகின்றது.