பனங்கற்கண்டு நோய் தீர்க்கும் காரணியே!

இதயத்தில் அதிக சளி உள்ளவர்கள் ஒழுங்காக பேச முடியாமல், நெஞ்செரிச்சலோடு, நிம்மதி இல்லாமல், இதயத்திலும் வலி ஏற்பட்டு அவஸ்தைக்குள்ளாவர்களுக்கு ஏற்றது தான் பனங்கற்கண்டு.
இது இதயத்தில் உருவாக கூடிய அதிகப்படியான சளியை வெளியேற்றுவதில் பங்கு வகிக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது பாலை நன்கு சூட காய்ச்சி அதனுடன் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை போட்டு கொதிக்க விட்டு ஆறிய பின் பருக இதயத்தில் இருக்கும் சளிகள் கரைந்து நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
உடல் சூடு, வெப்பத்தால் உடலில் ஏற்படும் நீர் வேட்கைக்கும் நல்ல பலன் தர கூடியது. வயிற்றில் ஏற்படும் தொல்லைகளும் அகலும்.
குரல் வளம் பாதிக்க பட்டவர்கள் இதை பாலுடன் கலந்து அருந்த நல்ல குரல் வளத்தை பெறுவீர்கள். அத்துடன் தொண்டையில் ஏற்படும் தொற்று, புண்கள் அனைத்தும் குணமடைந்து மேன்மை படும்.
தொடை கர கரப்பு, எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து என்பதில் ஐயமில்லை.