நீளமான கூந்தலை பெற உதவும் வெங்காயம்!
Sun, 10 Sep 2017

தலையில் ஏற்படும் பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது, வெண்மை நிற முடியை கருமை நிறத்தில் மாற்ற போன்ற அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் வகையில் அமைந்ததே இந்த வெங்காய மருத்துவம்.
முறைகள் :
- வெங்காயத்தை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நன்கு அரைத்து பின் அதன் சாற்றினை மட்டும் தனியே பிரித்து வடிகட்டி தலையின் அனைத்து பகுதியிலும் தேய்த்து முடியின் வேர் நுனி முழுவதும் தேய்க்க வேண்டும். பின் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு இரு முறை செய்ய தலையில் பேன்கள் ஒழியும் மற்றும் மேற்கூறிய அனைத்து பிரச்சனையும் வராது.
- இதனால் தலை வலியும் குறையும். இதனை வாரந்தோறும் செய்து வர வெள்ளை நரை மறைந்து கருமை முடி வரும் மற்றும் நீளமான கூந்தல் வளர்ச்சியை பெறலாம்.