Tamil Wealth

வெங்காயச்சாற்றை எப்படிப் பயன்படுத்தினால் முடியானது வளரும்?

வெங்காயச்சாற்றை எப்படிப் பயன்படுத்தினால் முடியானது வளரும்?

வெங்காயச்சாற்றை பயன்படுத்தினால் முடியானது வழுக்கைத் தலையிலும் வளரும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளைப் பின்பற்றி, ரிசல்ட் கிடைக்கவில்லை என்று வருந்துவதுண்டு.

இப்போது நான் சொல்லப்போகும் முறைகளை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.

1. வெங்காயப் பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யாமல் பஞ்சால் நனைத்து தலை முயியின் வேர்க்கால்களில் படுமாறு அழுத்தி தேய்க்கவும்..

2. மேலும் வெங்காயத்தின் சாறினை தலையில் மசாஜ் செய்யும் படியாக அப்ளை செய்தல் வேண்டும், அப்போதுதான் தலைமுடியின் வேர்க் கால்களில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

3. மேலும் வெங்காயச் சாறுடன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து, கலந்து தேய்த்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

4. அதேபோல் வெங்காயத்தினை எலுமிச்சை சாறு அல்லது தயிர் அல்லது முட்டை வெள்ளைகரு அல்லது கற்றாழை சேர்த்து தலையின் உச்சந்தலையில் தேய்க்கலாம்.

5. வீட்டில் வெங்காயச் சாறினைத் தயார் செய்து பயன்படுத்த முடியாதவர்கள், கடைகளில் விற்கும் ஆனியன் ஹேர் மாஸ்க்கினையும் பயன்படுத்தலாம். ஆனால் இதிலும் கெமிக்கல் இருக்கும் என்பதால் வெளியூர் செல்லும் நாட்கள், ஆபிஸ் செல்லும் நாட்களில் அதனைப் பயன்படுத்திவிட்டு வீட்டில் இருக்கும் நாட்களில் இயற்கையான ஹேர்மாஸ்க்கினைப் பயன்படுத்துவதையே முயற்சி செய்யுங்கள்.

Share this story