Tamil Wealth

குறைவான ரத்த அணுக்களால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் சத்தான உணவுகள்!

குறைவான ரத்த அணுக்களால் ஏற்படும் கோளாறுகளை நீக்கும் சத்தான உணவுகள்!

உடலில் இருக்கும் ரத்த அணுக்களை குறைக்காமல் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் தினம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகளை தேர்ந்து கொண்டு அதனை பழக்க படுத்தி கொள்ளுங்கள், ஆரோக்கியம் பெற்று ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

நெல்லிகாய் தினம் ஒன்று சாப்பிட ரத்த அணுக்களை அதிகரிக்கும், குறைவான ரத்த அணுக்களால் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் வராமல் தற்காத்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.

ப்ளேட்லெட்ஸ் உடலில் அதிகரித்து நன்மை தர மற்றும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பராமரிக்கும் திறன் கொண்டது வைட்டமின் எ நிறைந்துள்ள பழ வகைகளை சாப்பிடுங்கள். காய்கறிகளில் அதிகம் காண படும் வைட்டமின் எ பொருட்களை உணவுகளில் சேர்த்து சாப்பிட ரத்தத்தை சுத்திகரித்து ஆரோக்கியம் தரும்.

பார்க்கவே சிவப்பு நிறத்தில் தோற்றம் தரும் காய்கறியே பீட்ரூட். இதனை ஜூஸ் செய்து அல்லது வேக வைத்து சாப்பிட ஹீமோகுளோபின்கள் அதிகரிக்கும் மற்றும் ரத்த சோகை வரும் அபாயத்தில் இருந்து விடுதலை தரும்.

Share this story