முளை கீரையில் இருக்கும் சத்துக்கள் நமக்கு நன்மை தரும்!!
Sep 5, 2017, 09:30 IST

- காய்ச்சலால் பாதிக்க பட்டவர்களுக்கு உணவாக கொடுக்க பயன்படும் கஞ்சியில் முளை கீரையை சேர்த்து கொண்டு சாப்பிட உடலில் இருக்கும் அதிகமான வெப்பத்தை வியர்வையின் மூலமாக வெளியேற்றும்.
- தலை சுத்தல், வாந்தி போன்றவைகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் மன நிலைகளை சரி செய்ய இந்த கீரையை வேக வைத்து அதனுடன் நறுமண பொருட்கள் மற்றும் மிளகு தூள், சீரகம், இஞ்சி என அனைத்தும் சேர்த்து உட்கொள்ள குணம் ஆகும்.
- சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பருக்கள் மற்றும் கருமை நிறம் நீங்கி வெண்மை தோற்றத்தை பெறலாம் மற்றும் கண்களிற்கு கீழ் வரும் கருவளையத்தை போக்க இதனை அரைத்து அதனுடன் பாசி பயறு அல்லது கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம்.
- வளர்ச்சிதைவு மாற்றத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்தும் அடங்கி உள்ளன.
- உடலில் ஏற்படும் அரிப்புகள், தழும்புகள், சிரங்கு வந்தால் அதற்கு முளை கீரையை பயன்படுத்த நல்ல பலனை காணலாம் மற்றும் பசியின்மையால் அவதி படுவோர்களும் எடுத்து கொள்ள நல்ல பசி எடுக்கும்.