கேழ்வரகில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாமா?

கேழ்வரகில் கிடைக்கும் பால் ஆனது தாய்ப்பாலுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. அதாவது குழந்தைகளுக்கு 6 மாதம் துவங்கியதும் முதல் உணவாக கேழ்வரகு கஞ்சி அல்லது கேழ்வரகு பாலினையே கொடுக்கின்றனர்.
அந்த அளவு சக்தி வாய்ந்ததாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கேழ்வரகு குறித்த பிற தகவல்களைப் பார்க்கலாம். மேலும் கேழ்வரகானது நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது.
மேலும் இது எலும்புகளை வலுப்படுத்துவதாக உள்ளது, மேலும் ஒபேசிட்டி என்னும் டயட் பிரச்சினை உள்ளவர்கள் கேழ்வரகினை கூழ் காய்ச்சி குடித்துவந்தால் உடல் எடை நிச்சயம் குறையும். மேலும் உடல் சூடு உள்ளவர்களும் கட்டாயம் உடலைக் குளிர்ச்சியாக்க கேழ்வரகினைச் சாப்பிடலாம்.
மேலும் டயட் இருப்போர் கட்டாயம் அவர்களது டயட் லிஸ்ட்டில் கேழ்வரகினை ஏதாவது ஒரு வகையில் கொண்டிருத்தல் நல்லது, மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது உகந்ததாக உள்ளமையால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றது.
மேலும் கர்ப்பிணிப் பெண்கள் இதனை எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபினை எளிதில் அதிகரிக்க முடியும். மேலும் இது சீரண சக்தியினை மேம்படுத்துவதால் வயதானவர்களுக்கும் உகந்த பொருளாக உள்ளது..
முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை உள்ளவர்களும் கேழ்வரகினை எடுத்துக் கொண்டால் இரும்புச் சத்து அதிகமாகி, அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும்.