Tamil Wealth

வெள்ளரிக்காயில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாமா?

வெள்ளரிக்காயில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாமா?

வெள்ளரிக்காயினை நாம் பொதுவாக வெயில் காலங்களிலேயே தேடித் தேடி வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நாம் வெயில் காலத்தைவிடுத்து மற்ற காலங்களிலும் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். இப்போது நாம் வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் ஆனது அதிக அளவு நீர்ச்சத்து கொண்டதாக உள்ளது, இதனால் உடல் சூடு கொண்டவர்கள், தோல் வறட்சி உடையவர்கள் போன்றோர் வெள்ளரிக்காயினை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றது.

மேலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் இதனை டயட் உணவாக எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் இதனை எடுத்துக் கொண்டால் பசியும் அடங்கிவிடும், இதனால் உடல் எடை நிச்சயம் குறையும்.

மேலும் வெள்ளரிக்காய் மலச் சிக்கல், சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கீல் வாதம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றது. மேலும் வெள்ளரிக்காய் ஆனது, இரத்த கொழுப்பினைக் கட்டுக்குள் வைப்பதாகவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையினைக் கட்டுக்குள் வைப்பதாகவும் உள்ளது

 மேலும் வெளியே சென்று உடல் களைப்பாக இருக்கும்போதும் சரி, உடற்பயிற்சிகள் செய்த பின்னரும் சரி நாம் சாப்பிடுதல் வேண்டும். மேலும் மதிய உணவினை முடித்த பின்னர், நாம் எடுத்துக் கொண்டால் செரிமான சக்தியானது மேம்படும்.

மேலும் இதில் உள்ள சிலிகா முடி வளர்ச்சியினை அதிகரிப்பதாக உள்ளது.

Share this story