Tamil Wealth

கேரட்டில் உள்ள சத்துகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க!!

கேரட்டில் உள்ள சத்துகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க!!

கேரட்டினை நாம் பொரியல், அல்வா, குழம்பு என பல வகைகளில் சமைத்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நாம் கேரட்டினை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவது நமக்கு முழு சத்துகளையும் கொடுக்கிறது.

அதாவது கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டு உள்ளது. மேலும் கேரட்டில் கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. மேலும் இது கண் பார்வையினை அதிகரிப்பதாகவும், சரும அழகினைக் கூட்டும் வகையில், சரும வறட்சி, நிறம் கூடுதல், முடி அடர்த்தி போன்றவற்றிற்கு பெரிய அளவில் உதவுகிறது.

மேலும் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன் உடல் பருமனைக் குறைக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இது இன்சுலினை அதிக அளவு சுரப்பதால், சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையினைக் குறைக்க நினைப்போருக்கு கேரட்டினைப் பலரும் பரிந்துரைக்கக் காரணம், அதில் உள்ள அதிக அளவிலான நார்ச் சத்துகள்தான்.

கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யும் தன்மை கொண்ட கேரட் மாலைக் கண் நோயை தடுக்க செய்யவும் செய்கிறது. மேலும் கேரட்டானது புற்று நோய், இதய நோய்கள் போன்றவற்றினை சரிசெய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Share this story