இறைச்சியைப் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் பிரச்சினைகள் ஏற்படுமா?

பிரிட்ஜ் என்பது நம் வீட்டில் உள்ள மின் விளக்கு, மின் விசிறி போன்று அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் ஆடம்பரம் என்று கருதப்பட்ட இந்த பிரிட்ஜ் இல்லாத வீடுகள் என்பது குறைவுதான்.
அதிலும் பீரோவில் அடுக்கு அடுக்காக துணி இருப்பதுபோல் பிரிட்ஜிலும் போதும் போதும்னு சொல்கிற அளவு பொருட்கள் இருப்பது சாதாரண விஷயமாகிவிட்டது.
சைவ உணவுகள் மட்டுமின்றி அசைவ உணவுகளையும் பிரிட்ஜில் வைத்தே பதப்படுத்தி, சில நாட்கள் கழித்துப் பயன்படுத்தும் பழக்கத்தினையும் நம்மால் அதிகம் பார்க்க முடியும். ஆனால் இதில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை யாதெனில் இறைச்சியை பிரிட்ஜில் வைத்து பல மணி நேரங்கள் கழித்துப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற செயலாகும்.
அத்துடன் கடையில் வாங்கி உடனே சமைக்கும் உணவில் உள்ள ருசி, பிரிட்ஜில் இருப்பதில் இருக்காது. மேலும் பிரிட்ஜில் உள்ள வேதியியல் வாயுக்கள் இறைச்சியுடன் இணைந்து தீமைகளை விளைவிக்கவும் வாய்ப்புண்டு.
அதாவது பிரிட்ஜில் உள்ள இறைச்சியில் உருவாகும் தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.